X

டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை – 4 வது இடத்தில் விராட் கோலி

ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தற்போது,  டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று (செப்டம்பர் 16) வெளியிட்டுள்ளது. இதில், பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் தாவித் மலான் 841 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 819 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 733 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.  இந்திய கேப்டன் விராட் கோலி 717 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.  மற்றொரு இந்திய வீரரான கே.எல். ராகுல் 699 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 775 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் வணிந்து ஹசரங்கா 747 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 719 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில்  இந்திய பந்துவீச்சாளர்களும் எவரும் இடம்பெறவில்லை.

புவனேஷ்வர் குமார் 12-ம் இடத்திலும்,வாஷிங்டன் சுந்தர்  18-வது இடத்திலும் உள்ளனர்.