Tamilவிளையாட்டு

டி20 கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்

சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது  இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது  இடத்திலும் , மற்றொரு இந்திய வீரர் லோகேஷ்  ராகுல் 8-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.