Tamilவிளையாட்டு

டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியல் – ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2-வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.

அதேபோல், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8-வது இடத்தில் உள்ளார்.