Tamilவிளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த பும்ரா

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

அதன்படி, அஷ்வின் (274 விக்கெட்), சாஹல் (271 விக்கெட்), புயூஷ் சாவ்லா (270 விக்கெட்), அமித் மிஷ்ரா (262 விக்கெட்) ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் டி20-யில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், 250 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் , மும்பை வேகப்பந்த வீரர்பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

அவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் 2-வது இடத்தில் உள்ளார்.