டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் படைத்த புதிய சாதனை

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்த முடிந்த நிலையில் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இவ்விரு அணிகள் மோதிய டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். முதல் தொடரையே கைப்பற்றி ஆப்கானிஸ்தான் ஏற்கனவே புதிய வரலாற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 100 பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட விட்டு கொடுக்காமல் ரஷித்கான் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரஷித் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை விட்டுக்கொடுத்தார். இதனால் தொடர்ச்சியாக 106 பந்துகளில் பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார்.

2 சிக்சர்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியது முடிவுக்கு வந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools