X

டி20 உலக கோப்பை – ஸ்காட்லாந்தை வீத்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய ஜிம்பாப்வே

டி20 உலகக் கோப்பை முதல் சுற்றில் குரூப்-பி பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே. துவக்க வீரர் ரெஜிஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் கிரேக் எர்வின் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். வெஸ்லி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ரசா 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த கிரேக் எர்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மில்டன் ஷம்பா 11 ரன்களும் (நாட் அவுட்), ரியான் 9 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க, 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி, சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.