டி20 உலக கோப்பை – ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் நெற்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. ஹஸ்ரத்துல்லா 44 ரன்களும், ஷாஜத் 22 ரன்களும் சேர்த்தனர். ரஹ்மதுல்லா குர்பாஸ் 46 ரன்களும், நஜிபுல்லா 59 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் வீழ்ந்தது.
இதனால் ஸ்காட்லாந்து 10.2 ஓவரில் 60 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 130ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரகுமான் 5 விக்கெட்டும், ரஷீத் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.