Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஜிம்பாப்வேவை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி

டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. ஹுசைன் ஷாண்டோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.

முன்னணி வீரர்களான மாதேவீர், எர்வின், மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா ஆகியோர் விரைவில் அவுட்டாகினர். சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். ரியான் பர்ல் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வங்காளதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.