Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் மழையால் ரத்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நேற்று மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில், முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் குரூப்-1ல் உள்ள நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது.

மழை விட்டதும் போட்டி தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடைவிடாது மழை பெய்தது. எனவே, டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.