Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன. ‘பி’ பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இந்த அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. முதல் சுற்றில் கடைசி 2 லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெறுகிறது.

இப்போட்டிகளின் முடிவில் ‘பி’ பிரிவில் இருந்து முன்னேறும் இரண்டு அணிகள் எவை என்பது தெரியும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் நான்கு அணிகள் களம் இறங்குகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் பிரண்டன் கிங்-எவின் லீவீஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிங் 30 ரன்னுடனும், லீவீஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. இதனால், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது. இந்நிலையில், அயர்லாந்து அணி 17.3 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

இதில், பேட்டிங் செய்த ஆண்டி பால்பிர்னிய் 23 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். பின்னர், லார்கன் டக்கர் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அயர்லாந்து அணி வீழ்த்தியதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் இருந்து வெளியேறிகிறது.