டி20 உலக கோப்பை கிரிக்கெட் – ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரசா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி, 18.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லூக் ஜாங்வே 29 ரன்கள் அடித்தார். வெஸ்லி 27 ரன்கள் சேர்த்தார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools