7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் துணை கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:
பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர். காத்திருப்பு வீரர்கள் – பகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி