X

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – வங்காளாதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12  சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. நேற்றுஅபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்து வெற்றிக்கான பாதை அமைத்துக்கொடுத்தார். ஜாஸ் பட்லர் 18 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் டேவிட் மலன் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள், பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 35 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை எட்டியது.

இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் குவித்ததால், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.