டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 85 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 77 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் அரை சதமடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், தொடர் நாயகன் டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.