20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். உங்களது பார்மை மறந்து விடுவார்கள். கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர். அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெற தகுதியானவர்கள்.
எப்போது நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களின் ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் விளையாட நான் விரும்புகிறேன். அது மூத்த வீரர்களின் வேலைப் பளுவை குறைக்கும். இந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அணியில் இடம் பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கோலி, ரோகித் 20 ஓவர் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.