டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை நேபாளம் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ரிக்ஸ் 43 ரன்களும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டல் 4 விக்கெட்டுகளும் தேபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 116 என்ற இலக்கை துரத்திய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் குல்சன் ஜாவை டீ காக் ரன் அவுட் செய்தார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது.
நேபாளம் அணியை நிலை குலைய வைத்த தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.