டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோகித் சர்மா

அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கும் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

“2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports