டி20 உலகக் கோப்பை – ஓமன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஓமன் அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி சார்பில் சோயப் கான் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் (11) அடித்தார். இதன் மூலம் 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், கேப்டன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 12 மற்றும் 24 ரன்களை அடித்தனர்.

பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில், இங்கிலாந்து அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஓமன் சார்பில் பிலால் கான் மற்றும் கலீமுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அந்த பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools