டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை உகாண்டா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. உகாண்டா அணியில் 4 வீரர்கள் டக் அவுட்டும் அதில் 3 பேர் கோல்டன் டக் அவுட்டும் ஆனார்கள்.
41 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இத்தொடரின் தனது முதல் வெற்றியை நியூசிலாந்து அணி இன்று பதிவு செய்துள்ளது.