ஆஸ்திரேலியா டி20 அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பிஞ்ச் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், மிட்செல் மார்ஷ் இடைக்கால கேப்டனாக பணியாற்றி வந்தார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்து வருகிறார். இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றிருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தது. இந்த சீசனில் இந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் பேட் கம்மின்ஸிடம் கேப்டன் பதவியை வழங்க ஆஸ்திரேலியா தயாராக இருந்தது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய பிறகு, டி20 போட்டியை கேப்டன் பதவி என்ற சுமை இல்லாமல் மகிழ்ச்சியாக விளையாட இருப்பதாக தெரிவித்தார். இதனால் கேப்டன் பதவி மேல் அவருக்கு ஆர்வம் இல்லை எனத் தெரியவந்தது.
இதனால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷிடம் கேப்டன் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் மிட்செல் மார்ஷ் தலைமையில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இனிமேல் உலகக்கோப்பை வரை ஆஸ்திரேலியாவுக்கு டி20 தொடர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்ட்ரூ மெக்டொனால்டு “ஆஸ்திரேலியாவின் டி20 அணியை வழிநடத்திச் செல்லும் மிட்செல் மார்ஷின் திறன் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அணியை வழி நடத்திச் செல்ல அனைத்தும் தயாராக இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் நாங்கள் சரி எனச் சொல்ல வேண்டியுள்ளது” என்றார்.
டி20 உலகக் கோப்பைக்காக தலைமை சேர்னேம் ஜார்ஜ் பெய்லி மற்றும் டோனி டோட்மெய்டு ஆகியோருடன் இணைந்து தேர்வுகுழு அமைக்க இருப்பதாக தெரிவிதுள்ளார்.