Tamilவிளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை வெளியீடு

2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த ஐசிசி முடிவு செய்தது. அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை டி20 கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

முதலில் 8 அணிகளுக்கான தகுதிச்சுற்று நடைபெறும். ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 12 அணிகள் கொண்ட குரூப் 12 சுற்றுக்கு முன்னேறும். 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோத உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எந்த அணி எந்த அணியுடன் மோதுகிறது என்பதை பார்ப்போம்.

 

    ரவுண்டு-1  
தேதி குரூப் அணிகள் இடம்
அக்- 17 பி ஓமன்- பப்பு நியூ கினியா ஒமன்
அக்- 17 பி வங்காளதேசம்- ஸ்காட்லாந்து ஒமன்
அக்-18 அயர்லாந்து- நெதர்லாந்து அபுதாபி
அக்-18 இலங்கை- நமீபியா அபுதாபி
அக்-19 பி ஸ்காட்லாந்து- பப்பு நியூ கினியா ஓமன்
அக்-19 பி ஓமன்- வங்காளதேசம் ஓமன்
அக்-20 நமீபியா- நெதர்லாந்து அபுதாபி
அக்-20 இலங்கை- அயர்லாந்து அபுதாபி
அக்-21 பி வங்காளதேசம்- பப்பு நியூ கினியா ஓமன்
அக்-21 பி ஓமன்- ஸ்காட்லாந்து ஓமன்
அக்-22 நமீபியா- அயர்லாந்து ஷார்ஜா
அக்-22 இலங்கை- நெதர்லாந்து ஷார்ஜா
       
    சூப்பர் 12- குரூப்- 1  
அக்- 23   ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அபுதாபி
அக்- 23   இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் துபாய்
அக்- 24   ஏ1- பி2 ஷார்ஜா
அக்- 26   தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் துபாய்
அக்- 27   இங்கிலாந்து- பி2 அபுதாபி
அக்- 28   ஆஸ்திரேலியா- ஏ1 துபாய்
அக்- 29   வெஸ்ட் இண்டீஸ்- பி2 ஷார்ஜா
அக்-30   தென்ஆப்பிரிக்கா- ஏ1 ஷார்ஜா
அக்-30   இங்கிலாந்து- ஆஸ்திரேலியா துபாய்
நவ-1   இங்கிலாந்து- ஏ1 ஷார்ஜா
நவ-2   தென்ஆப்பிரிக்கா- பி2 அபுதாபி
நவ-4   ஆஸ்திரேலியா- பி2 துபாய்
நவ-4   வெஸ்ட் இண்டீஸ்- ஏ1 அபுதாபி
நவ-6   ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அபுதாபி
நவ-6   இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா ஷார்ஜா
       
    சூப்பர் 12 குரூப்- 2  
அக்-24   இந்தியா – பாகிஸ்தான் துபாய்
அக்-25   ஆப்கானிஸ்தான் – பி1 ஷார்ஜா
அக்-26   பாகிஸ்தான் – நியூசிலாந்து ஷார்ஜா
அக்-27   பி1 – ஏ2 அபுதாபி
அக்-29   ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் துபாய்
அக்-31   ஆப்கானிஸ்தான்- ஏ2 அபுதாபி
அக்-31   இந்தியா- நியூசிலாந்து துபாய்
நவ-2   பாகிஸ்தான்- ஏ2 அபுதாபி
நவ-3   நியூசிலாந்து- பி1 துபாய்
நவ-3   இந்தியா- ஆப்கானிஸ்தான் அபுதாபி
நவ-5   நியூசிலாந்து- ஏ2 ஷார்ஜா
நவ-5   இந்தியா- பி1 துபாய்
நவ-7   நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அபுதாபி
நவ-7   பாகிஸ்தான்- பி1 ஷார்ஜா
நவ-8   இந்தியா – ஏ2 துபாய்
       
நவ-10   அரையிறுதி-1  
நவ-11   அரையிறுதி-2  
நவ-14   இறுதிப்போட்டி