டி20 உலகக்கோப்பையின் தொடக்க சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கின. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அயர்லாந்து- நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. பால் ஸ்டிர்லிங் (30), காரேத் டெலானி (44) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 15.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நமீபியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 96 ரன்னில் சுருண்டது. பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. 26 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் வந்த பனுகா ராஜபக்சே 27 பந்தில் 42 ரன்கள், அவிஷ்கா பெர்னாண்டோ 28 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை 13.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.