Tamilவிளையாட்டு

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யபடலாம் – ஷேவாக் கருத்து

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இந்நிலையில், ஐபிஎல் இரண்டாவது போட்டிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது:

இரண்டாம் பாதி துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டதால் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்சுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது என்றார்.

மேலும், ஐபிஎல் தொடரில் எனது முதல் தேர்வு இஷான் கிஷன். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல், கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன். இந்த நான்கு பேரையும் நான் கூர்ந்து கவனிப்பேன்.

நான் தேவ்தத்தின் பேட்டிங்கை நேசித்து வருகிறேன். நால்வரில் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் தேவ்தத் படிக்கல் எனது தேர்வு என தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்படலாம். யாருக்கு தெரியும், அவர் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய டாப்-ஆர்டராக அவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறினார்.