X

டி வில்லியர்ஸ் அவுட்டானதால் கோபமடைந்த மகன்! – வைரலாகும் ஐபிஎல் வீடியோ

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதலில் ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய ஸ்ரீகர் பரத், விராட் கோலியுடன் சேர்ந்து பொறுப்புடன் விளையாடியதால் ரன் வேகம் உயர்ந்தது. ஸ்ரீகர் பரத் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார்.

விராட் கோலி 52 ரன்னில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 56 ரன்னில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து 2 அதிரடி வீரர்கள் வெளியேறியதால் ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டி வில்லியர்ஸ் அவுட்டானதும் கேமரா அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பியது. தனது தந்தை அவுட்டான விரக்தியில் நாற்காலியில் ஓங்கி ஒரு அடி விட்டார் அவரது மகன். ஆனால் அது வலிக்கவே அடுத்த நொடி ஏன் இதை செஞ்சோம் என அவரது முகம் மாறுகிறது. அவரது இந்த செயலைக் கண்டு டி வில்லியர்ஸின் மனைவி டேனியல் சற்று பதறிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.