டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி நியமனம் – கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 8 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது.

ஆனால் இதற்கு ஒப்புதல் வழங்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துவிட்டார். இந்த நியமனம் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி அதை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார். அந்த கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

கவர்னர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, மீண்டும் அதே பரிந்துரையை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news