வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வருகிற செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்பதற்கு வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணை தெரிவித்துள்ளது.
எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளது? கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களும் ஜூன் 14-ந் தேதி வெளியாகும் என தெரிகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் முன்கூட்டியே தயாராகும் வகையில் தற்போது தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிக்கும் நாள் ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வை 17 லட்சம் பேர் எழுதினர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.