தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 16.30 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
மாநிலம் முழுவதும் 3,000 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 450 தேர்வு மையங்க்ளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
பறக்கும் படை உள்ளிட்ட 4,000க்கு மேற்பட்ட குழுக்கள் தேர்வு கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பகல் 1 மணிக்கு முடிவடைகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.