டி.என்.பி.எல் கிரிக்கெட் – மதுரையை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி
திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 19.3 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் அவுட்டானார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் சரவணகுமார், சுபோத் பதி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டகாரர்கள் விரைவில் அவுட்டாகினர். 32 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது. அடுத்து இறங்கிய பாபா இந்திரஜித், ஆதித்ய கணேஷ் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 48 பந்தில் 78 ரன் குவித்தார்.