X

டி.என்.பி.எல் கிரிக்கெட் – நெல்லையை வீழ்த்தி திருப்பூர் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திண்டுக்கல்லில் நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் (35), குருஸ்வாமி அஜிதேஷ் (20) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர்.

18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது. திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கணேசன் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக துஷார் ரகேஜா 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் 34 ரன்களும், ராஜேந்திரன் விவேக் 21 ரன்களும், கணேஷ் 3 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில், 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு எளிதில் 128 ரன்கள் எடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றனர்.

Tags: tamil sports