தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் 8
அணிகள் பங்கேற்கின்றன.
இதுவரை 5 டி.என்.பி.எல். போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றது.
டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு டி.என்.பி.எல் போட்டி
நடைபெறவில்லை.
6-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எல். ஆட்சி மன்றகுழு கூட்டத்தில் நேற்று முன் தினம் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இந்த சீசனிலும் வீரர்களை வரைவு ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்வது
என்று முடிவு செய்யப்பட்டது.
டி.என்.பி.எல். போட்டி ஜூன் 27-ந் தேதி தொடங்கலாம் என்று தெரிகிறது. ஜூலை 31-ந்தேதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் வரை போட் நடைபெறலாம். திண்டுக்கல், நெல்லை, சேலம், கோவை ஆகிய 4
இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதமபரம் மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இந்த சீசனில் இல்லை. சேலம், கோவையில் மின்னொளி வசதி உள்ளன. அங்கு 4 ஆயிரம் பேர் அமரும் வகையில்
இருக்கைகள் உள்ளன.
வீரர்கள் தேர்வு வரைவு ஒதுக்கீடு முறையில் இருந்து ஏலத்துக்கு கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த மாற்றம் அடுத்த ஆண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும். இது
தொடர்பாக அணிகளின் உரிமையாளர்களு டன் விவாதித்துள்ளோம். அனைத்து அணி உரிமையாளர்களும் ஏலம் முறை சிறந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த ஆண்டும் வரைவு ஒதுக்கீடு பட்டியலில் இருந்து வீரர்கள் தேர்வு முறை நீடிக்கும். நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்.சுக்காக ஸ்பான்சரை தேடி வருகிறோம்.
ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்சிடம் உறுதி செய்த பிறகு போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.