டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் நேற்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது திருப்பூர் அணி. அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்தனர். சேப்பாக் அணி சார்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் பால் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இந்த தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. பாபா அபராஜித் 46 ரன்னும், ஹரீஷ் குமார் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.