டி.என்.பி.எல் கிரிக்கெட் – திண்ட்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி சேலம் ஸ்பர்டன்ஸ் வெற்றி

6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சேலம் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அந்த அணியின் டேரில் பெராரியோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களம் இறங்கியது. அந்த அணி கேப்டன் நிஷாந்த் டவுக் அவுட்டானார். விமல் குமார் அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். முகுந்த், ஹரிகரன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார்கள்.

20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கணேசன் பெரியசாமி 3 விக்கெட்களும், அஸ்வின், கார்த்திகேயன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools