டிராபிக் போலீஸ் காலை அமுக்கிவிட்ட இளைஞர் – வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.

சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.

ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools