டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி – ஜனாதிபதி இரங்கல்

திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி – ஜனாதிபதி இரங்கல்

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் படு காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.

நேற்று (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 145 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமான நபர்கள் அமர்ந்திருந்தந்தாலும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறினார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமைத்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools