X

‘டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம்,  அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் வெளியான பிறகு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் தொடர் ஆதரவால் இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

‘வெள்ளிக்கிழமை நாயகன்’- ‘வெள்ளிக்கிழமை நாயகி’ என ரசிகர்களால் போற்றப்பட்ட  ஜீ.வி. பிரகாஷ் குமாரும், ஐஸ்வர்யா ராஜேசும் முதன்முறையாக இணைந்து ‘டியர்’ படத்தில்  நடித்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கான காரணம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். இதனாலேயே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.