சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஆகியோரது நடிப்பில் காலத்தால் அழியாத காதல் காவியமாக திகழும் ‘வசந்த மாளிகை’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாக உள்ளது.
பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், கலரில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘வசந்த மாளிகை’ திரைப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்கள் இன்றும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
டி.ராமாநாயுடு தயாரிப்பில் பிரகாஷ்ராவ் இயக்கியிருந்த இப்படம், இயக்குநரும் கதையாசிரியருமான வி.சி.குகுநாதனின் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிணாமத்தில் தயாரிகி உள்ளது.
விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவான ‘வசந்த மாளிகை’ படத்தை விரைவில் வெளியிட உள்ளது.