தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.