X

டிசம்பர் 16, 17 தேதிகளில் 3 மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், வரும் 16 மற்றும் 17-ந்தேதிகளில் கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

3 மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.