டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் பங்கேற்ற 25-வது ‘லீக்’ ஆட்டம் நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி துவக்க வீரர்களாக அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் களமிறங்கினர். சிறந்த துவக்கம் தந்த இந்த ஜோடியில் ஷாருக்கான் 30(27) ரன்களும், அபினவ் முகுந்த் 21(20) ரன்களும், அடுத்து களமிறங்கிய வெங்கட்ரமணன் 18(20) ரன்களும், பிரதோஷ் ராஜன் 43(35) ரன்களும், ஆண்டனி தாஸ் 1(4) ரன்னும், அகில் ஸ்ரீநாத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அஜித் ராம் 1(2) ரன்னும் எடுத்து வெளியேறினர். இறுதியில் ரங்கராஜன் 11(10) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முடிவில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணியின் சார்பில் பிரனேஷ் 3 விக்கெட்டுகளும், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட்டுகளும், அபினவ் மற்றும் அருண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணியின் சார்பில், ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். திண்டுக்கல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அஜித் ராம் பந்து வீச்சில் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் (0) ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய சுமத் ஜெயின் 10(9) ரன்களும், ராமலிங்கம் ரோகித் (0) ரன் ஏதும் எடுக்காமலும், விவேக் 5(8) ரன்னும், மோகன் அபினவ் 8(9) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அடுத்ததாக களமிறங்கிய முகமது 19(20) ரன்களும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுஜய் 34(46) ரன்களும், பிரனேஷ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஆதித்யா அருண் 3(6) ரன்னும் எடுத்து வெளியேறினர்.
இறுதியில் சிலம்பரசன் 6(9) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் 18.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை கிங்ஸ் அணியின் சார்பில் மணிகண்டன் 3 விக்கெட்டுகளும், அஜித் ராம் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரங்கராஜன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.