தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 126 ரன் எடுத்தது. அதிக பட்சமாக சசிதேவ் 44 ரன்னும், முருகன் அஸ்வின் 28 ரன்னும், கவுசிக் காந்தி 22 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்தும், ஜெகதீசனும் ஆடினர். ஆரம்பமே திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நிஷாந்த் 4 ரன்னிலும், ஜெகதீசன் (0) சதுர்வேத் (0) ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் களம் வந்த சுமந்த் ஜெயினும், மோகன் அபினவும் அணியை சரிவில் இருந்து மீட்னர். இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்தனர். சுமந்த் ஜெயின் 46 ரன் இருக்கும்போது அலெக்சாண்டர் வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து. இதனால் சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் அணி தரப்பில் அதிக பட்சமாக பெரியசாமி 5 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.