டிஆர்பிக்காக தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் – பிக் பாஸ் பற்றி ஓவியா புகார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்குச் சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், அவரோ அந்த பிரபலத்தைத் திரையுலகில் பெரிதாக உபயோகிக்கவில்லை.

இதனிடையே, எப்போதாவது தான் தனது சமூக வலைதள பக்கத்துக்கு வருவார் ஓவியா. சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். நேற்றிரவு திடீரென்று “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.

இந்த ட்வீட் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அப்போது அந்தப் பதிவுக்கு ஒருவர் “ஆம். தடை செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா “அவர்கள் போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools