X

டாஸ்மாக்கில் நேற்று ஒரு நாளுக்கு ரூ.163 கோடி விற்பனை!

தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. உயர்நீதிமன்றம் தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம். அதனடிப்படையில் நேற்று தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பகுதி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.

நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரேநாளில் 163 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திருச்சியில் 40.5 கோடி ரூபாய்க்கும், கோவையில் 33.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது.

Tags: south news