டாப்சியை சாடிய கங்கனாவின் தங்கை

தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்று இருக்கும் டாப்சி வித்தியாசமான வேடங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் டாப்சியை நடிகை கங்கனாவின் தங்கை ரங்கோலி விமர்சித்து இருக்கிறார்.

‘நடிகை டாப்சி எனது அக்கா கங்கனா ரணாவத் நடிப்பை அப்படியே காப்பியடித்து அவரைப் போலவே நடிக்கிறார். டாப்சிக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் கங்கனாவைவிட குறைந்த அளவே சம்பளம் வாங்குகிறார். அத்துடன் கங்கனாவை அச்சு அசலாக மிமிக்ரி செய்கிறார். இதில் டாப்சியின் ஒரிஜினாலிட்டி எதுவும் இல்லை’ என பகிரங்கமாக திட்டி தீர்த்திருக்கிறார் ரங்கோலி.

சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த டாப்சி, கங்கனாவை பற்றி மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தாராம். அதைப்பார்த்து கோபம் அடைந்த கங்கனாவின் தங்கை ரங்கோலி நேரடியாக டாப்சியை தாக்கி பதிலடி தந்திருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools