X

ஜோஸ் பட்லர் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் – ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்மித் ஓராண்டு தடையால் கடந்த தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது ராஜஸ்தான் அணியில் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது சிறப்பானதாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஜோஸ் பட்லர் உடன் இணைந்து விளையாடுவது சிறப்பானது. அவருடன் எதிர்முனையில் பேட்டிங் செய்தால் எனக்கு மிகவும் எளிதாக இருக்கும். அவர் ஒரு அற்புதமான வீரர். அத்துடன் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

ராஜஸ்தான் அணிக்காக சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ரசிகர்கள் அதிக அளவு மைதானத்திற்கு திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்.’’ என்றார்.

Tags: sports news