ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஒபன் வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.

இதற்கிஐயே, ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனால், குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகமே.

பொது மக்களின் நலன் கருதி என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 133சி(3) பிரிவின் கீழ் நோவக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்கிறேன் என அலெக்ஸ் ஹாவ்கே தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools