பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில் 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜே.பி.நட்டா நேற்று குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.