இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மாரைஸ் பெய்ன் உடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சென்றார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி டியோடோரோ எல்.லாக்சின் ஜூனியரை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் முனிச் பாதுகாப்பு மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்