இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் வெளியானது. இப்பாடலை பாடலாசிரியர் சூப்பர் சுப்பு எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினிகாந்த் பாராட்டி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், வணக்கம் சுப்பு, ரஜினிகாந்த் பேசுறேன். ஹும்கும் பாடலை கேட்ட பிறகு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். நீங்க சூப்பர் சுப்பு. உங்களுக்கு இது பெரிய வெற்றியாக இருக்கும், கொண்டாடுங்கள். நன்றி என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.