X

ஜெயலலிதா வேடத்திற்காக ஹார்மோன் மாத்திரை சாப்பிட்ட கங்கனா ரனவாத்!

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா, தமிழ் பேசவும் பயிற்சி பெற்றார்.

ஜெயலலிதா போன்ற உடல்வாகை பெற, அவர் வழக்கத்தைவிட அதிக அளவு சாப்பிட்டதாகவும், சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா தனது வாழ்க்கையில் கடுமையான உடல் மாற்றத்தை எதிர்கொண்டார். பரத நாட்டிய நடன கலைஞராக வளர்ந்தவர் கண்ணாடி போன்ற பளபளப்பான உருவம் கொண்டிருந்தார்.

அரசியலுக்கு வந்தபின் ஏற்பட்ட விபத்தில் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. அதையெல்லாம் சித்தரிக்க விரும்பியதால் நானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய், ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இவற்றை செய்ததாக கூறி உள்ள கங்கனா, தலைவி படத்திற்காக மட்டும் 6 கிலோ எடை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.