ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்
ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அதன்பின்னர் 4-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
அதனை ஏற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.